மேலும் 9 லட்சம் டோஸ் கோவிஷில்டு கொரோனா தடுப்பு மருந்துகள் சென்னை வந்தடைந்தன.
தமிழகத்துக்கு ஆகஸ்ட் மாதத்தில் 79 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில் கூடுதலாக 23 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.