தமிழ்நாட்டிற்கு உர ஒதுக்கீட்டின்படி உரிய நேரத்தில் உரங்களை வழங்குமாறு மத்திய இராசயனம் மற்றும் உரத்துறை அமைச்சருக்கு, தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார். தென்மேற்கு பருவ மழை மற்றும் மேட்டூர் அணை திறப்பால், நடப்பாண்டில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், தமிழகத்தில் 25 லட்சத்து 40ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள அனைத்து பயிர்களுக்கும் அடி உரம் மற்றும் யூரியா மற்றும் ஏடிபி உரங்களின் தேவை அதிகரித்துள்ளது. எனவே, மாநில உர ஒதுக்கீட்டின்படி உரிய நேரத்தில் உரங்களை முழுமையாக வழங்க வேண்டும் என்றும், இறக்குமதி செய்யப்படும் உரங்களை தமிழ்நாட்டில் உள்ள துறைமுகங்களில் மற்றும் புதுச்சேரி மாநிலத்திலுள்ள துறைமுகத்திலும் வந்தடைய ஏற்பாடு செய்து தர வேண்டும் எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.