மதுரை ஆதீனத்திற்கு நித்தியானந்தா வந்தால் போலீசாரால் கைது செய்யப்படுவார் என மதுரை ஆதினம் ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த அவர் மதுரை ஆதினத்தில் 3 வேளையும் மக்களுக்கு அன்னதானம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் மக்கள் மத்தியில் தேசப்பற்று குறைந்து வருவதால் தேவார பாடசாலை மூலம் தேசப்பற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாகத் தெரிவித்தார்.