நாகை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவின் கொடியேற்றம் 2வது ஆண்டாக பக்தர்கள் இன்றி நடைபெற்றது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் பெருவிழா நிகழ்ச்சிகளில் பொதுமக்கள், பக்தர்கள் பங்கேற்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில், புனித ஆரோக்கிய மாதா உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஆலய வளாகத்தில் பவனியாக எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து கொடிக்கு தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்து சிறப்புத்திருப்பலியுடன் கொடியேற்றம் நடைபெற்றது.
அதேப்போல், சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய வருடாந்திர திருவிழாவின் கொடியேற்றம், பக்தர்களின்றி நடைபெற்றது.
சென்னை மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, பெசன்ட் நகர் பங்குத்தந்தை வின்சென்ட் சின்னத்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.