கோவையில் கொலை வழக்கில் விசாரணைக்கு ஆஜராக வந்தவர்களை நீதிமன்ற வளாகம் முன்பே வைத்து கத்தியால் குத்திய கும்பலை 12 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு அம்மன்குளம் பகுதியில் நவீன் குமார் என்பவர் குத்தி கொலை செய்யப்பட்டார். வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டு, கோவை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
நேற்று இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு வந்த விஜயகுமார், ஹரிஹரன் என்ற இருவரை நீதிமன்ற வளாகத்தில் வைத்தே ஒரு கும்பல் கத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிசிடிவி மூலம் தாக்குதலில் தொடர்புடைய 10 பேரை தனிப்படை போலீசார், 12 மணி நேரத்தில் கைது செய்தனர்.