ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டிப் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்கள் தங்கள் பெயர்களைச் சேர்க்கத் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
மார்ச் 19ஆம் நாள் வெளியிடப்பட்ட பட்டியலில் விடுபட்டுள்ள வாக்காளர்கள் தங்கள் சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலரிடம் சென்று அவர்களின் பெயர்களைப் பட்டியலில் சேர்க்கலாம்.
இவ்வாறு புதிதாகச் சேர்க்கப்படும் பெயர்கள் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் தொடர்புடைய தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட பின்னரே அவரது பெயர் ஊராட்சி வார்டு வாரியான வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.