சென்னை மெரினா காமராஜர் சாலையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை அகற்றப்பட்டு, வேரிடத்தில் வைக்கப்பட்டது தொடர்பாக, சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.
பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், கலைஞர் கருணாநிதி பார்த்து பார்த்து வடிவமைத்த நடிகர் திலகம் சிவாஜியின் சிலை, சில காரணங்களால் கடந்த ஆட்சியில் சிலை அகற்றப்பட்டதாக தெரிவித்தார்.
அப்போது, குறுக்கிட்ட அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன், நீதிமன்ற உத்தரவு காரணமாகத்தான் சிலை வேறு இடத்தில் மாற்றி வைக்கப்பட்டது என்றார். தொடர்ந்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை, யாருடைய பார்வைக்கும் படக்கூடாது என்பதற்காக சிலையை கூவம் ஓரத்தில் வைத்தது யார்? என வினவினார்.