அமெரிக்காவில் இருந்து தமிழகத்திற்கு வாங்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸை கண்டறியும் மரபணு பகுப்பாய்வு கருவி பெங்களூர் வந்தடைந்தது.
தற்போது உருமாறிய கொரோனாவை கண்டுபிடிக்க மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பெங்களூர் மற்றும் ஹைதராபாத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் முடிவுகள் கிடைக்க காலதாமதம் ஆகிறது என்பதால் தமிழகத்தில் நவீன வசதியுடன் கூடிய மரபணு பகுப்பாய்வு மையம் அமைக்கப்படவுள்ளது.
இதற்காக, இரண்டறை கோடி ரூபாய் மதிப்பில் அமெரிக்காவில் தயாரான பகுப்பாய்வு கருவி சிங்கப்பூர் வழியாக பெங்களூரு வந்தடைந்துள்ளது.
இன்னும் ஓரிரு நாளில் அந்த கருவி தமிழகம் வந்தடைகிறது. பல்வேறு கருவிகளை உள்ளடக்கிய இந்த மையத்தை இயக்க ஒரு மருத்துவர், மைக்ரோபயாலஜிஸ்ட் உள்பட 6 பேர் பெங்களூருக்கு சென்று சிறப்பு பயிற்சி பெற்று வந்துள்ளனர்.