சிவகங்கையில் தரமற்ற சாலைகள் அமைத்த விவகாரத்தை செய்தியில் பார்த்துவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 6மணிக்கு தன்னை அழைத்து பேசிய நிலையில் அதற்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதோடு, அதிகாரிகள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
பேரவையில் நெடுஞ்சாலைத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அவர், சிவகங்கையில் சாலைப் பணிகள் மோசமாக உள்ளதாக தொலைக்காட்சியில் வெளியான செய்தியை பார்த்து காலை 6 மணிக்கு முதலமைச்சர் தன்னை அழைத்து பேசியதாக குறிப்பிட்டார்.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட சாலை பணிக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ததோடு, அதிகாரிகள் 4 பேரையும் பணியிடை நீக்கம் செய்ததாக குறிப்பிட்டார்.