தமிழக அரசுக்கு ஆயிரத்து 600 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதால் சாலை பணிகளுக்கு பேக்கேஜிங் முறையில் டெண்டர் விடும் நடைமுறையை கைவிடுவதாக அமைச்சர் எவ வேலு அறிவித்துள்ளார்.பேரவையில் பேசிய அவர், திமுகவின் தேர்தல் அறிக்கையிலேயே பேக்கேஜிங் டெண்டர் முறை ஒழிக்கப்படும் என குறிப்பிட்டிருந்ததாக கூறினார்.
இந்த நடைமுறை மூலம் ஒப்பந்ததாரர்கள் இடையே ஆக்கப்பூர்வமான போட்டி இல்லாத நிலை ஏற்படுவதாகவும், சாலைப் பணியாளர்கள், ஆய்வாளர்கள் பலர் வேலை இழக்கும் சூழல் இருப்பதாகவும், எனவே முதலமைச்சரின் அனுமதியோடு பேக்கேஜிங் டெண்டர் நடைமுறை ரத்து செய்யப்படுகிறது என்று அமைச்சர் கூறினார்.