இலங்கை தமிழர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த ரூபாய் 317 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்தார்.
முகாம்களில் புதிதாக 7400 வீடுகள் கட்டித்தரப்படும், மின் வசதி, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்திட 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும், ஆண்டுதோறும் இதுபோன்ற வசதிகளை செய்து தர ஏதுவாக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.
இதுதவிர கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டு பயிற்சி, சிலிண்டர் மானியம் உள்ளிட்ட மொத்தம் 317 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.