திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆவணித்திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து காலை 5.40 மணியளவில் கோவில் உள் பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, 16 வகையான அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறாது என்றும், செப்டம்பர் 5ம் தேதி வரை கோவிலுக்குள் பக்தர்கள் வர அனுமதி இல்லை எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.