குழந்தை எழுத்தாளர்களுக்கு ஆண்டுதோறும் 25ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் கவிமணி என்ற பெயரில் விருது வழங்கப்படும் என பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த பள்ளிக்கல்வி துறையின் கொள்கை விளக்க குறிப்பில், 18வயதிற்கு உட்பட்ட சிறார்களின் எழுத்து ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் 3 சிறந்த எழுத்தாளர்களை தேர்வு செய்து விருது வழங்கப்படவுள்ளது.
அரசுப் பள்ளிகளில் பாரம்பரிய கலைகளையும், தற்காப்பு கலைகளையும் மாணவர்களிடம் கொண்டு சேர்க்க உரிய பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் புத்தகங்களை மின்னணு வடிவில் வழங்க ஆறரை கோடி ரூபாய் செலவில் இணையவழி குறிப்புதவிப் பிரிவு ஏற்படுத்தப்படும். அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதலை ஒளிவுமறைவின்றி நடத்த கலந்தாய்வுக் கொள்கை வகுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.