திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரிக்கு கலைஞர் அரசு கலைக் கல்லூரி என மீண்டும் பெயர் மாற்றப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் உயர்கல்விதுறை மீதான மானியக் கோரிக்கையின் போது பேசிய கலசப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ., திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரிக்கு, 1970களில் கலைஞர் அரசு கலைக் கல்லூரி எனப் பெயர் இருந்ததாகவும், பின்னாளில் அந்த பெயர் பின்பற்றப்படாமல் கைவிடப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர், திருவண்ணாமலையில் உள்ள அரசு கலைக் கல்லூரி, மீண்டும் கலைஞர் அரசு கலைக் கல்லூரி என்றே அழைக்கப்படும் எனத் தெரிவித்தார்.