குற்ற வழக்கில் சசிகலா தண்டிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு எதிரான வரி மற்றும் அபராத நடவடிக்கையை கைவிட முடியாது என வருமான வரித்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த 1994-95ம் நிதியாண்டில் வருமானத்தை மறைத்து காட்டியதாக எழுந்த புகாரில் சசிகலா மீது வழக்குப்பதிவு செய்த வருமான வரித்துறை, 48லட்சம் ரூபாய் வரி மற்றும் அபராதம் செலுத்தும்படி உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்தது.
மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்த போது, குற்ற வழக்கில் சசிகலா தண்டிக்கப்பட்டுள்ளதால், ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான தொகை கொண்ட வருமான வரி மற்றும் அபராதம் தொடர்பான வழக்குகளை கைவிடும், மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் அறிவிப்பு, அவருக்கு பொருந்தாது என்று வருமான வரித்துறை தெரிவித்தது.
ஏற்கனவே, இதே அறிவிப்பின் அடிப்படையில், நடிகர் ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கை வருமானவரித்துறை திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது