அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து, சிறந்த மதிப்பெண்களுடன் பிளஸ் 2 முடித்து, உயர்கல்வியைத் தொடர வசதியில்லாத மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக, "ஆனந்தம் யூத் பவுண்டேஷன்" என்ற தனியார் தொண்டு நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த, அரசு பள்ளித் தலைமை ஆசிரியர்களின் பரிந்துரையின் அடிப்படையில், அந்த மாவட்டங்களை சேர்ந்த ஏழை மாணவர்கள், உயர் கல்வி பயில்வதற்கு 100 சதவீதம் தொகையை தனியார் தொண்டு நிறுவனம் வழங்க உள்ளது.
இதற்காக தகுதியுள்ள மாணவர்களின் பட்டியலை தேர்வு செய்து அனுப்ப 8 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.