கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கஞ்சா புகைக்கும் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
ஆ.நத்தம் கிராமத்தை சேர்ந்த படையப்பா என்ற இளைஞர் கானா பாட்டு ஒன்றுக்கு கஞ்சா புகைத்து அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், இதேபோன்று மற்றொரு வீடியோ பதிவு செய்ய தயாராக இருந்த படையப்பாவை கைது செய்தனர். இதேபோல் அவருக்கு கஞ்சா விற்பனை செய்த, பண்ருட்டியை சேர்ந்த கஞ்சா வியாபாரி சந்துருவை கைது செய்தனர்.