சட்டமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்பதால், அவதூறு வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராக விலக்கு கோரி,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்த சிறப்பு நீதிமன்றம், செப்டம்பர் 14ல் இருவரும் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
தன்னை அதிமுகவில் இருந்து நீக்கி இருவரும் வெளியிட்ட அறிக்கையால் தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாக பெங்களூரு புகழேந்தி, சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ஓபிஎஸ்-ம், இபிஎஸ்-ம் ஆஜராக சம்மன் அனுப்பட்டிருந்தது. வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அலீசியா முன்பு விசாரணைக்கு வந்தபோது ஒபிஎஸ்,இபிஎஸ் தரப்பில் ஆஜராக விலக்கு கோரி தாக்கலான மனுக்களை நிராகரித்த நீதிபதி, சம்மன் அனுப்பிய முதல் முறை ஆஜராக விலக்கு அளிக்க முடியாது என உத்தரவிட்டார்.