செப்டம்பர் 1-ஆம் தேதியில் இருந்து கல்லூரிகள் திறக்கப்படும் சூழலில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கல்லூரி வளாகம், வகுப்பறைகளை சுத்தப்படுத்த வேண்டும். மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி போடாத பேராசிரியர்கள், பணியாளர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவர் எனவும், கல்லூரிகளிலேயே தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளி மாணவர்கள் கல்லூரிக்கு வர அவசியமில்லை. வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என கண்காணிப்பு குழு அமைத்து சரிபார்க்க வேண்டும்.
கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, ஆன்லைன் வகுப்புகளே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.