செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அப்பாவி மூதாட்டிகளை ஏமாற்றிய "அடப்பாவி" : "நூதன முறை" திருடனுக்கு வலை

Aug 24, 2021 09:43:20 AM

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் கொரோனா நிவாரண நிதி வந்துள்ளதாகக் கூறி, இரண்டு மூதாட்டிகளை ஏமாற்றி நூதன முறையில் 2 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகளைத் திருடிச் சென்றவனை போலீசார் தேடி வருகின்றனர். 

கோபிச்செட்டிப்பாளையம் வேலுமணி நகரைச் சேர்ந்த சுந்தரி என்ற மூதாட்டி, கணவரை இழந்து, அரசு வழங்கும் உதவித் தொகையை வைத்து தனியாக வசித்து வருகிறார். இவரது வீட்டின் ஒரு பகுதியில் கமலா என்ற மூதாட்டி வாடகைக்குக் குடியிருந்து வருகிறார். இவரும் கணவரை இழந்து, பக்கத்திலுள்ள ஆலை ஒன்றில் கூலி வேலைக்குச் சென்றவாறு தனியாகத்தான் வசித்து வருகிறார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை அங்குள்ள கடை ஒன்றில் பால் வாங்கச் சென்ற கமலா பாட்டியை வழிமறித்த டிப்டாப் ஆசாமி ஒருவன், கொரோனா நிவாரண நிதி வந்திருக்கிறது என்றும் உங்களைப் புகைப்படம் எடுத்து அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளான். வீட்டிற்குச் சென்று புகைப்படம் எடுக்கலாம் வாருங்கள் என மூதாட்டியை தனது இருசக்கர வாகனத்தில் அமரவைத்து அழைத்துச் சென்றுள்ளான் மர்ம ஆசாமி. வீட்டிலிருந்த சுந்தரி பாட்டியிடம் விஷயத்தைக் கூறிவிட்டு கமலா பாட்டி பின் பக்கம் உள்ள தனது வீட்டுக்குச் சென்றுள்ளார்.

சுந்தரி பாட்டியைப் பார்த்த மர்ம ஆசாமி, கொரோனா நிவாரண நிதி 18 ஆயிரம் ரூபாய் வந்துள்ளது என்றும் அதற்கு புகைப்படம் எடுக்க வேண்டும் என்றும் அவரிடமும் கூறியுள்ளான். கமலா பாட்டியோடு வந்ததால் அவருக்குத் தெரிந்தவர் என எண்ணி அவனை நம்பிய சுந்தரி பாட்டியிடம், நகைகள் அணிந்திருந்தால் கொரோனா நிவாரண நிதி கொடுக்க மாட்டார்கள் என்றும் எனவே நகைகளைக் கழற்றி வைத்துவிட்டு வாருங்கள் புகைப்படம் எடுக்கலாம் என்றும் கூறியுள்ளான் மர்ம ஆசாமி.

அவன் கூறியதை நம்பி, தான் அணிந்திருந்த 5 சவரன் நகைகளைக் கழற்றி படுக்கையறைக்குள் இருந்த தலையணைக்கடியில் வைத்த சுந்தரி பாட்டி, மர்ம ஆசாமிக்கு காபி தயார் செய்வதற்காக சமையலறைக்குள் சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம ஆசாமி, அவர் சமையலறைக்குள் சென்ற இடைவெளியில் நகைகளை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளான்.

மூதாட்டிகள் இருவரும் தனியாக வசித்து வருவதை நோட்டம்விட்டு, திட்டம்போட்டு இந்தத் திருட்டை மர்ம ஆசாமி அரங்கேற்றி இருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார், அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.


Advertisement
பா.ஜ.க கொடி கட்டிய காரில் சென்ற பெண்ணை மறித்து அடித்து கடத்திய கும்பல்..! கிளைமேக்ஸில் காத்திருந்த டுவிஸ்ட்..
சிவகாசியில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி.. திண்டுக்கல் அணியை வீழ்த்தி தமிழக காவல்துறை அணி வெற்றி
மதுரையில் தந்தையிடம் தகராறில் ஈடுபட்ட மகனை தடுக்க சென்ற பெயிண்டர் பலி கழுத்தை வெட்டி முகத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர் கைது..
திருப்பூரில் தொடர்ந்து கைது செய்யப்படும் வங்க தேசத்தினர்..
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை புரட்டிப்போட்ட 'ஹெலன்' சூறாவளி.. வெள்ள நீர் புகுந்த கராஜில் நிறுத்தப்பட்டிருந்த மின்சார கார் தீப்பற்றி எரிந்தது
விருத்தாசலம் அரசு மருத்துவமனையை சேதப்படுத்திய வழக்கு - 12 பேர் கைது
வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் குடிபோதையில் நுழைந்த இளைஞர்.. காவலரை தாக்கியதாக கைது..
சேலம் உருக்காலையில் மத்திய எஃகுத்துறை அமைச்சர் குமாரசாமி ஆய்வு..
தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை உடனே தடுப்பது சாத்தியமற்றது - மாநகராட்சி
சீரான மின்சாரம் வழங்காததைக் கண்டித்துஅ.தி.மு.க வினர் போராட்டம்.. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில் திரளானோர் பங்கேற்பு..

Advertisement
Posted Sep 30, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

பா.ஜ.க கொடி கட்டிய காரில் சென்ற பெண்ணை மறித்து அடித்து கடத்திய கும்பல்..! கிளைமேக்ஸில் காத்திருந்த டுவிஸ்ட்..

Posted Sep 30, 2024 in வீடியோ,Big Stories,

இது தான் பைக்கா..? போலீசாரே...நியாயமா... ? திருடு போன வண்டியின் மீதி..? வாகன ஓட்டி அதிர்ச்சி..

Posted Sep 29, 2024 in வீடியோ,Big Stories,

My v3 ads பணத்திற்காக கணவன் - மனைவி கொலை.. சடலத்தோடு காரில் 2 நாள் ...!

Posted Sep 29, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

தூக்குப்பா.. தூக்கிப் போடுங்க.. இப்படி ஒரு ஆபீசர் தான் வேணும்.. நடைபாதை நடக்குறதுக்கு தானே ?.. போலீசார் அதிரடி காட்டிய காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்டெய்னருக்குள் க்ரெட்டா கார் பணத்துடன் தப்பிய கொள்ளை கும்பல் கொக்கி கொள்ளையன் சுட்டுக் கொலை..! பட்டப்பகலில் பர பர சேசிங் காட்சிகள்


Advertisement