செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

ஃபெராரி முதல் கேரவன் வரை பண்ணை வீட்டில் சிக்கிய "பளபள" கார்கள்

Aug 23, 2021 08:59:12 PM

கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சுகாஷ் சந்திரசேகர் மீது பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு, சிபிஐ, அமலாக்கத் துறை ஆகிய அமைப்புகள் மோசடி வழக்குகள் பதிவு செய்துள்ளன.

இதுவரை 21 வழக்குகளில் சுகாஷ் சந்திரசேகர் கைதாகியுள்ளான். குறிப்பாக கடந்த 2013-ஆம் ஆண்டு சென்னையில் போலி ஆவணங்கள் கொடுத்து 20கோடி ரூபாய் வங்கியில் கடன்பெற்று மோசடி செய்ததாக சுகாஷ் சந்திரசேகரும், அவனது காதலி நடிகை லீனா மரியம்பாலும் கைது செய்யப்பட்டனர்.

அதற்கு பிறகு, கடந்த 2018-ஆம் ஆண்டு, தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை டி.டி.வி. தினகரனுக்கு சாதகமாக மீட்டுத் தருவதாக கூறி 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட புகாரிலும் சுகாஷ் சந்திரேகர் கைது செய்யப்பட்டான்.

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்திரசேகர், அவ்வப்போது ஜாமீனில் வெளிவந்த நிலையில், அந்த காலக்கட்டத்திலும் 200கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாக டெல்லியிலுள்ள பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு வழக்குப்பதிந்தனர்.

அத்தோடு, சட்டவிரோத பணபரிமாற்றம் என்ற சட்டப்பிரிவில் அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து சுகாஷ் சந்திரசேகர் தொடர்பான இடங்களில் சோதனை மேற்கொண்டது. 

இந்த நிலையில், சென்னை ஈ.சி.ஆர். கானத்தூர் அருகே உள்ள பண்ணை வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில், 20-க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பிஎம்டபிள்யூ, ரோல்ஸ் ராய்ஸ், பென்ஸ், ஃபெராரி, லேண்ட் க்ரூஸர் போன்ற சொகுசு கார்கள் உட்பட சினிமா படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்படும் சொகுசு கேரவனும் சிக்கியுள்ளன.

அத்துடன் கணக்கில் வராத பணம் 82 லட்ச ரூபாய், 2 கிலோ தங்கம் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்துள்ளதாகக் கூறும் அமலாக்கத்துறையினர், அந்த வீட்டைப் பூட்டி சீல் வைத்தனர். 

அந்த பண்ணை வீட்டைச் சுற்றிலும் இருபது அடி உயரத்திற்கு தடுப்பு சுவர் அமைத்து, யாரும் உள்ளே செல்ல முடியாதபடி மின்கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது திகார் சிறையில் உள்ள சுகாஷ் சந்திரசேகர் ஜாமீனில் வரும்போதெல்லாம் இந்த பண்ணை வீட்டில் தான் தங்கியிருந்தார் என்றும், மோசடி தொடர்பாக பல முக்கியமான நபர்களை இங்கு வைத்து தான் சந்தித்திருக்கிறார் என்றும் கூறப்படும் நிலையில், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பறி அமலாக்கத்துறை ஆய்வு நடத்தி வருகிறது.

சுகாஷ் சந்திரசேகர் தொடர்புடைய சென்னையிலுள்ள மேலும் மூன்று இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில், சோதனை முடிவில் சுகாஷ் சந்திரசேகர் பயன்படுத்திய லேப்டாப், 70 ஆயிரம் ரூபாய் பணத்துடன் வழக்கு தொடர்பான பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.


Advertisement
"இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை" - யு.ஜி.சி தலைவர்
கைதியை அழைத்துச் செல்லும் போது போலீஸ் வாகனத்தில் மது அருந்திய எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட்
தடுப்பூசி போட்டுக்கொண்ட 10 மாதக் குழந்தை உயிரிழப்பு.. பெற்றோர் குற்றச்சாட்டு..!
மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - டி.ஜி.பி எச்சரிக்கை
ஒலிம்பிக் போட்டிகளை மதுரையில் நடத்த ஆலோசனை - அமைச்சர் மூர்த்தி
மருத்துவர் மீது கத்தியால் தாக்கப்பட்டதன் எதிரொலி.. இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை பார்க்க வருபவர்களிடம் தீவிர சோதனை
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை கருத்து.. நடிகை கஸ்தூரியைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு
கொடைக்கானல் வந்து செல்லும் பேருந்துகளில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்கள்.. ஏன்?..
தூத்துக்குடியில் 7,893 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்
ராமநாதபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு பணிக்கு வர மறுத்த மருத்துவர்கள்!.. பொதுமக்கள் வாக்குவாதத்திற்கு பிறகு தாமதமாக சிகிச்சை

Advertisement
Posted Nov 14, 2024 in சென்னை,Big Stories,

எலிக்கு வைத்த மருந்து.. இரு குழந்தைகள் பலி.. பெஸ்ட் கண்ட்ரோல் செய்தது சரியா? வங்கி மேலாளார் வீட்டில் நடந்தது என்ன ?

Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்

Posted Nov 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”


Advertisement