கொடநாடு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அதுகுறித்து சட்டமன்றத்தில் விவாதிப்பது விதிமீறல் என்றும், நீதிமன்ற அவமதிப்பு என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீதிமன்றத்தின் அதிகாரத்தை சட்டமன்றமோ, சட்டமன்றத்தின் அதிகாரத்தை நீதிமன்றமோ எடுத்துக் கொள்ள முடியாது என்று குறிப்பிட்டார்.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவரை பேசவிடாமல் மனரீதியாக துன்புறுத்தியாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடர்பாக ஜெயக்குமார் வைத்த விமர்சனத்திற்கு, போலீசார் எஃப்ஐஆரை செய்தியாளர்கள் சுட்டிக்காட்டியபோது, போலீசார் என்றாலே ஆளுங்கட்சிக்கு சாதகமாக மாற்றி மாற்றி எழுதுபவர்கள்தானே என பதிலளித்தார். அப்போது கொடநாடு வழக்கு அதிமுக ஆட்சிக் காலத்தில்தானே பதிவு செய்யப்பட்டது என்பதை செய்தியாளர்கள் சுட்டிக்காட்டியபோது, வெள்ளைக்காரன் காலத்தில் இருந்து உள்ள வழக்கத்தை தாம் கூறுவதாக ஜெயக்குமார் பதிலளித்தார்.