தஞ்சாவூரில் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள 21 மாதக் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற 16 கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில், பெற்றோர் உதவி கோரியுள்ளனர்.
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை சிராஜ்பூரைச் சேர்ந்த ஜெகதீஷ் - எழிலரசி தம்பதியரின் குழந்தை ஒரு வயதாகியும் எழுந்து நடக்காத நிலையில், வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் பரிசோதித்ததில் மரபணுக் கோளாறால் முதுகுத் தண்டுவடத் தசைநார் சிதைவு நோயால் குழந்தை பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
அமெரிக்காவின் நோவார்டிஸ் நிறுவனம் தயாரித்துள்ள சோல்கென்ஸ் மா என்கின்ற மருந்தை ஊசியால் செலுத்தினால் மரபணு மாற்றம் ஏற்பட்டுக் குழந்தைக்கு நோய் குணமாகிவிடும் எனத் தெரிவித்துள்ளனர்.
16 கோடி ரூபாய் விலையுள்ள இந்த மருந்தை 60 நாட்களுக்குள் செலுத்தினால்தான் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்பதால் கொடையுள்ளம் கொண்டோர் உதவ வேண்டும் எனப் பெற்றோர் கோரியுள்ளனர்.