காஞ்சிபுரத்தில் சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் தண்ணீரில் மிதக்கும் கல் ஒன்றை கண்டெடுத்துள்ளார்.
பின்னர் இந்தக் கல் காஞ்சிபுரம் அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது. பவளப்பாறை வகையை சார்ந்த இவ்வகை கற்கள் மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் அதிகளவில் காணப்படும் என்றும், அங்கு சென்றவர்கள் யாராவது எடுத்து வந்திருக்கலாம் எனவும் காப்பாட்சியர் உமாசங்கர் தெரிவித்தார்.