கோவையில் தனது 9வது வயதில் 9 சிறுகதை புத்தகங்களை எழுதி வெளியிட்டு சிறுமி ஒருவர் பலரையும் வியக்க வைத்துள்ளார்.
கோவை உலியம்பாளையத்தைச் சேர்ந்த ராஜேஷ் - ராஜலட்சுமி தம்பதியின் இளைய மகளான ஹரிவர்ஷினி சிறுவயது முதலே பெற்றோரிடம் சுவாரசியமான கதைகளைக் கேட்டு வளர்ந்துள்ளார்.
பின்னாளில் சிறுகதைப் புத்தகங்களைத் தேடி வாங்கிப் படிக்கும் பழக்கம் அதிகரித்ததன் பலனாக கற்பனைத் திறனும் எழுத்து நடையும் சிறுமிக்குக் கை கூடியுள்ளது. அதனைக் கொண்டு 9 சிறுகதைகளை எழுதியுள்ளார் ஹரிவர்ஷினி.
தனது படைப்புகளுக்கு ஓவியங்களால் உயிர் கொடுப்பது தனது சகோதரி வர்ஷினிதான் என்று கூறும் ஹரிவர்ஷினி, பின்னாளில் பெரிய எழுத்தாளராக வரவேண்டும் என்பதே தனது ஆசை என்றார்.