கொடைக்கானல் அருகே 300 அடி பள்ளத்தில் டெம்போ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், கேரளாவை சேர்ந்த 17 இளைஞர்கள் காயம் அடைந்தனர்.
எர்ணாகுளத்தை சேர்ந்த 17 இளைஞர்கள் டெம்போ வாகனத்தில் சுற்றுலாவிற்காக கொடைக்கானல் நோக்கி வந்துகொண்டிருந்தனர். கொடைக்கானல்- பழனி மலைச்சாலையில் கூம்பூர் வயல் அருகே வந்துகொண்டிருந்த போது ஓட்டுநர் தூங்கியதால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
சுற்றுவட்டார பகுதி மக்கள் உதவியுடன் மீட்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.