திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதி தூக்கி வீசிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
வாணிகரையை சேர்ந்த மாயக்கண்ணன் என்பவர் தனது அண்ணன் மகள் ஷாலினியுடன் காக்காதோப்பு பிரிவில் குறுக்கே கார் வருவதை பார்க்காமல் வேடச்சந்தூர் சாலையை நோக்கி செல்ல முயன்றார்.
அப்போது, கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கல்லை நோக்கி அதிவேகமாக வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் இருசக்கர வாகனம் தூக்கி வீசப்பட்ட நிலையில், படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.