வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரித்துள்ள நிலையில், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என நினைத்தாலும், நிதி நிலைமை மந்தமாக உள்ளதால் அதை நிறைவேற்ற முடியாத சூழல் இருப்பதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என அரசு ஊழியர்களின் கோரிக்கை கடந்த 18 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டிய அமைச்சர், பல அரசுகள் மாறி மாறி வந்தாலும், அரசின் நிதிச்சூழல் காரணமாக அதை நிறைவேற்ற முடியவில்லை என்றார்.
தாம் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த போது முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகளை தற்போது அமைச்சர் ஆகியும் நிறைவேற்ற முடியவில்லை என்று குறிப்பிட்ட அமைச்சர், இதற்குக் காரணம் தற்போதைய நிதி சூழல் தான் என்றும் ஆதங்கம் தெரிவித்தார்.