கோவில்களில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட காலியிடங்களை நிரப்ப வேண்டுமென்ற உயர் நீதிமன்றம் உத்தரவினை பின்பற்றியே, கோவில் செயல் அலுவலர்கள் நியமன நடைமுறைகளை மேற்கொண்டுள்ளதாக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
ஆகம விதிகளுக்கு முரணாக அர்ச்சகர் நியமிக்கப்படுவதாக வழக்குகள் பதிவான நிலையில், அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் பதில்மனு தாக்கல் செய்தார்.
விதிகளை மீறி நியமிக்கப்பட்டதாக கருதும் விண்ணப்பதாரர்கள், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அல்லது துணை ஆணையர் அணுகி நியமனம் தொடர்பாக முறையிடலாம் என்ற விதி இருப்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.