தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பி.எஸ் ஆகியோர், நாளை வியாழக்கிழமை சந்திக்க உள்ளனர்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், காலை 11 மணியளவில், இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. கொடநாடு விவகாரத்தில், 2 நாள் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், ஆளுநருடன், ஓ.பி.எஸ், இ.பி.எஸ் சந்திப்பு நடைபெற உள்ளது.