நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வரி ஏய்ப்பு வழக்கில் கைதான தொழிலதிபர் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.
நெல்லை மாவட்ட கேடிசி நகர் பகுதியைச் சேர்ந்த பெரியராஜா என்பவர் வெளிநாடுகளில் இருந்து சிமெண்ட் இறக்குமதி செய்து விற்பனை செய்து வந்துள்ளார்.
இவர் உள்ளீடு வரி தொடர்பாக போலி பில்கள் தயாரித்து 6 கோடி ரூபாய் வரை அரசுக்கு வரி இழப்பீடு செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் நெல்லை மாவட்ட வணிகவரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் பொருட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.