போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை ரத்து செய்யும் அதிகாரத்தை சார் பதிவாளருக்கு வழங்கும் சட்ட திருத்தத்தை அறிமுகம் செய்திருப்பதாக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்.எல்.ஏ. வேல்முருகன் ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மூர்த்தி, பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை ரத்து செய்யக் கூடிய அதிகாரம் சார் பதிவாளருக்கு இல்லாமல் இருந்ததாக கூறினார்.
ஆனால் தற்போது போலி ஆவணங்கள் மற்றும் ஆள்மாறாட்டம் செய்து பதிவு செய்யப்படும் பத்திரங்களை ரத்து செய்யக் கூடிய அதிகாரத்தை சார் பதிவாளருக்கு வழங்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சர் மூர்த்தி கூறினார்.