மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு காதல் மனைவி மீது கொதிக்கும் பாலை ஊற்றி கொடுமை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.
அய்யனகவுண்டன்பட்டியைச் சேர்ந்த அருண்குமார்- ஜெயபிரதா தம்பதியினருக்கு 10 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியுடன் தினமும் அருண்குமார் சண்டையிடுவது வழக்கம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதை அடுத்து ஆத்திரத்தில் சூடான கொதிக்கும் பாலை எடுத்து மனைவி மீது ஊற்றிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.