தமிழக சட்டசபையில் பொது, வேளாண் பட்ஜெட்டுகள் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. மூன்று நாட்கள் விவாதம் நடைபெற்றபின் பதிலுரை இடம்பெற உள்ளது.
தமிழக சட்டசபையில் கடந்த 13ந்தேதி பொது பட்ஜெட்டும், மறுநாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. இந்த இரு பட்ஜெட்டுகள் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. காலை 10 மணிக்கு அவை கூடியதும் முதலில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து பட்ஜெட்டுகள் மீதான விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர். அப்போது உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். வருகிற 18ந்தேதி வரை விவாதம் நடைபெறும்.
பொது மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு 19ந் தேதி அவையில் பதிலுரை இடம்பெறும். அதனைத் தொடர்ந்து 23ந்தேதி முதல் துறை ரீதியாக விவாதம் நடக்கிறது.