நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் ஒரே நேரத்தில் சுமார் 40 பேருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து, அங்கு சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறனர்.
இதனையடுத்து, வீடுகளில் பயன்படுத்தப்படும் குடிநீரில் குளோரின் அளவு சரியாக உள்ளதா என சோதனை செய்யப்படுகிறது. மேலும், மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட தொட்டிகளும் சுத்தம் செய்யப்படுகின்றன.
களக்காடு பகுதியில் டிராக்டர்கள் மூலம் சில தனியார் நிறுவனங்கள் குடிநீர் சப்ளை செய்து வருகின்றனர். இந்த குடிநீரின் மூலமே நோய் பரவியதாக கூறப்படும் நிலையில், டிராக்டர் மூலம் குடிநீர் சப்ளை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.