தமிழக கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் தமிழ் மொழிக்கு கிடைத்த அதிகாரம் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள சங்கர நேத்ராலயா மருத்துவமனையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட அவர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கவிஞர் வைரமுத்து, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், தமிழ் மொழியில் அர்ச்சனை என்ற இரண்டு சரித்திர திட்டங்களை தமிழக அரசு கொண்டுவந்துள்ளதாக தெரிவித்தார்.