சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்பதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு கோட்டைக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தலைமைச் செயலாளர் இறையன்பு வரவேற்றார்.
திறந்தவெளி வாகனத்தில் நின்றவாறு காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார். பின்னர், கோட்டை கொத்தளத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது, நாட்டுப்பண்ணும், காவல்துறையின் கூட்டுக்குழல் இசையும் ஒலிக்கச் செய்யப்பட்டது.
விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெருமை வாய்ந்த கோட்டையில் தேசியக் கொடி ஏற்றும் வாய்ப்பை கொடுத்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அத்துடன் தியாதிகளுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்படும் என்றும் மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகம் ரூபாய் 6கோடியில் புதுப்பிக்கப்படும் என்றும் அறிவித்தார்.