அண்ணா தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள் தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கில் ஒரு வாரத்தில் பதிலளிக்க அதிமுகவுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேட்பு மனு தாக்கல் செய்ய ஒரு நாள் மட்டுமே வழங்கியதாகவும், காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே தேர்தல் நடத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ளதாக கூறி தொடரப்பட்ட வழக்கில், வேளச்சேரியில் எட்டாயிரம் உறுப்பினர்கள் உள்ள நிலையில் 5 மணி நேரத்தில் வாக்களிக்க இயலாது எனக் கூறப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் கூடுவதால் கொரோனா பரவ வாய்ப்புள்ளதாகக் கூறித் தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு, அதிமுக பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்குத் தள்ளி வைத்துள்ளார்.