திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் ஓடும் ரயிலில் ஏற்பட்ட வியாபார போட்டியில் பொறி வியாபாரி கழுத்து அறுக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஜோலார்பேட்டை செல்லும் ரயிலில் வாலாஜா அம்மூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது தம்பி குபேந்திரன் ஆகியோர் பொறி விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.
இதில் யார் முதலில் வியாபாரத்தை முடிப்பது என இருவருக்கும் போட்டி ஏற்பட்டதாகவும், மோதலில் குபேந்திரன் கத்தியால் மணிகண்டனின் கழுத்தை அறுத்துவிட்டு திருவாலங்காடு ரயில் நிலையத்தில் தப்பியதாக கூறப்படுகிறது.