தமிழக சட்டப்பேரவையில் வேளாண் துறைக்காக தனியாக நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் வகையில் வேளாண் துறைக்குத் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார்.
இதனை நிறைவேற்றும் வகையில் வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
விவசாயிகள், விவசாய நிபுணர்கள் மற்றும் விவசாயச் சங்கங்கள் ஆகியோரைக் கலந்தாலோசித்து இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வேளாண் துறை, கால்நடைத் துறை, பால்வளத் துறை போன்றவற்றில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள், அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு விபரங்கள் இதில் இடம்பெறும். தமிழக வரலாற்றில் வேளாண் துறைக்கான முதல் தனி பட்ஜெட் என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு விவசாயிகளிடத்தில் அதிகமாக உள்ளது.