செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு..! குறைந்த கட்டணத்தில் மல்டி லெவல் பார்க்கிங்

Aug 14, 2021 07:37:59 AM

சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தின் கீழ் சென்னை பாண்டி பஜாரில் அமைக்கப்பட்டுள்ள மல்டி லெவல் பார்க்கிங் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வாகன நிறுத்தும் வசதிகளை மேம்படுத்தவும் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. தியாகராய நகர் பாண்டிபஜார், நுங்கம்பாக்கம் காதர் நவாஸ்கான் சாலை, அண்ணாநகர், மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட 30 இடங்களில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் கொரோனா காரணமாக சென்னை முழுவதும் அமல்படுத்த முடியாமல் தடைபட்டு போனது. இந்நிலையில், முதற்கட்டமாக ஸ்மார்ட் சிட்டி திட்டம் அடிப்படையில் பாண்டிபஜார் பகுதியில் மல்டி லெவல் பார்க்கிங் வசதி கொண்டு வரப்பட்டு செயல்பட்டு வருகிறது.

ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தில் சாலை ஓரம் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களுக்கு மணிக்கு 5 ரூபாயும், நான்கு சக்கர வாகனங்களுக்கு மணிக்கு 20 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கபட்டு வருகிறது. இதே கட்டணம் தான் மல்டி லெவல் பார்க்கிங்-ற்கும் வசூலிக்கப்படுகிறது. இந்த வாகன நிறுத்த வளாகத்தில் ஒரு தளத்தில் 37 வாகனங்கள் என்ற அளவில் மொத்தம் 6 தளத்தில் 222 கார்கள் நிறுத்தும் வகையில் இடவசதி உள்ளது.

அதே போல 513 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியும் உள்ளது. முழுவதும் தானியங்கி முறையில் இயங்கும் நவீன வாகன நிறுத்தம் குறைவான நேரத்தில் மிகுந்த பாதுகாப்புடன் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாகனம் நிறுத்தம் செய்வதற்கு வீட்டில் இருந்தபடியே முன்பதிவு செய்து கொள்ளும் வகையிலும், இணையவழியில் கட்டணம் செலுத்தும் வகையிலும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தவிர்க்க, சென்னையில் மக்கள் அதிகம் கூடும் அனைத்து பகுதிகளிலும், வாகன நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளிலும் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தை விரைவில் அமல்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மேலும், சாலை ஓரங்களில் மட்டுமின்றி அருகில் உள்ள மெட்ரோ உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் புதிதாக வாகன நிறுத்த வளாகங்கள் உருவாக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் அமலுக்கு வரும் அனைத்து பகுதிகளிலும் தற்போது வசூலிப்பது போல கட்டணம் வசூலிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.


Advertisement
பாளையங்கோட்டை போலீசார் வாகன சோதனையில் சிக்கிய பயங்கர ஆயுதங்கள், பிரபல ரவுடி உட்பட 15 பேர் கைது
தூத்துக்குடி அருகே வீட்டில் ரூ.30 கோடி மதிப்பிலான வீட்டில் போதைப்பொருட்களை பதுக்கி வைத்த நபர் கைது
திருப்பூரில் சாலையில் பாய்ந்த வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள்
திருப்பூர், பலவஞ்சிபாளையம் காலனியில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்
திருப்பதி தொடர் மழையிலும் பக்தர்கள் குடும்பத்துடன் சாமி தரிசனம்
வெள்ளத்தில் தத்தளித்த ஓ.எம்.ஆர் சாலையில் இயல்பு நிலை
அதிகாலை 2 மணிக்கு புறப்பட்ட ரயில்களில் ஏறிச்சென்றனர்.
பால் பாக்கெட் வழங்கிய த.வெ.க கட்சியினர்
சென்னை மாதவரம் நெடுஞ்சாலையில் தேங்கிய மழை நீர்
அரபிக் கடலில் ஏற்பட்ட சீற்றத்தால் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்

Advertisement
Posted Oct 14, 2024 in தமிழ்நாடு,Big Stories,

தமிழகத்தை உலுக்கிய 13 ஏகாதசி கொலைகள்..! வேட்டையனாய் துப்பறிந்த டி.எஸ்பி..! ஒரு நிஜ கிரைம் திரில்லர்

Posted Oct 12, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா?.. மனித தவறு விபத்துக்கு காரணமா?.. உயர்மட்டக்குழு தீவிர விசாரணை

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் 90 கி.மீ.வேகத்தில் மோதிய எக்ஸ்பிரஸ் தடம் புரண்டன 6 பெட்டிகள்

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்ணே நவமணியே... ஒரு நாயின் பாசப்போராட்டம் வாய் விட்டு அழுத சோகம்..! மனிதர்களை விஞ்சிய தாய் பாசம்..

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வானத்தில் வட்டமிட்டாலும்144 உயிர்களை பாதுகாத்த பைலட்ஸ் இக்ரான் ரிபாத் - மைத்ரேயி..! விமானத்தில் பெட்ரோலை வீணாக்கியது ஏன் ?


Advertisement