தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது எனவும், நுண் நோய்கட்டுப்பாட்டு பகுதிகளை உருவாக்கி தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்த சுற்றறிக்கையில், சென்னை மாநகராட்சியில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும், சில பகுதிகளில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மூன்று மாவட்டங்கள், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள், கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தபட்ட பிறகு கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
எனவே, நோய் பரவல் அதிகரித்துள்ள பகுதிகளில் முகக்கவசம் அணிவதன் முக்கியத்தும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.