சுவாச கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வரும் மதுரை ஆதீனம் அருணகிரிநாதரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அப்பலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
கடந்த 8ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 77 வயதாகும் அருணகிரிநாதர் ஐசியூ பிரிவுக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.