நாளை துவங்கும் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. வேளாண் துறைக்கான பட்ஜெட் சனிக்கிழமை தாக்கலாகிறது.
அவற்றை தொடர்ந்து பல்வேறு துறைகளுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதமும் நடக்க உள்ளது. இந்த நிலையில், சட்டப்பேரவை கூடும் கலைவாணர் அரங்கிற்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வளாகம் முழுவதும் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கருவிகள் சரிபார்க்கப்பட்டன. கலைவாணர் அரங்கம் அமைந்துள்ள வாலாஜா சாலையை அழகூட்டும் விதமாக சென்டர் மீடியனில் புதிய செடிகளை மாநகராட்சி ஊழியர்கள் நட்டு வருகின்றனர்