அரியலூரில், டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இளம் பெண் உயிரிழந்தார். சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவர், ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு தனது சொந்த ஊரான பிலாக்குறிச்சிக்கு சென்றுள்ளார்.
அப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்தபோது டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர், அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அந்த இளம்பெண் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு 15 நாள் சிகிச்சைக்கு பிறகு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து பிலாக்குறிச்சி கிராமத்தில், கொசு ஒழிப்பு உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.