தூத்துக்குடியில், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சகோதரர் வீட்டின் பூட்டை உடைத்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
கேடிசி நகரில் வசித்து வரும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சகோதரர் டாக்டர் சுதா ஆனந்தன், கோவில் விழாவிற்காக தனது சொந்த கிராமமான தண்டுபத்திற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த தங்க நகைகள், வெள்ளி குத்துவிளக்கு உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தகவலறிந்து வந்த சிப்காட் போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.