தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் பெரியாறு பாசனப் பகுதியிலுள்ள ஒருபோகப் பாசன நிலங்களுக்கு அமைச்சர்களும், மாவட்ட ஆட்சியர்களும் தண்ணீர் திறந்து விட்டனர்.
இந்த ஆண்டில் போதுமான அளவு மழை பெய்து ஜூலை மாதத்திலேயே வைகை அணை நிரம்பியதால் 12 ஆண்டுகளுக்குப் பின் சிவகங்கை மாவட்டப் பகுதிகளுக்கு உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
நொடிக்கு ஆயிரத்து 130 கன அடி என்னும் அளவில் 120 நாட்களுக்குத் தண்ணீர் திறந்து விடப்படும். இதன்மூலம் மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் மொத்தம் ஒரு இலட்சத்து ஐயாயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும்.