மதுரையில் வீடுகளில் ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகள் வளர்த்தால் ஆண்டுக்கு 10 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோழி, மீன் இறைச்சி கடைகள், விற்பனை கூடங்கள், சதுர அடிக்கு 10 ரூபாய் வீதம் ஆண்டுதோறும் கட்டணம் செலுத்தி உரிமம் பெற வேண்டும் எனவும், உரிமம் இல்லாமல் செயல்படும் இறைச்சி கடைகளுக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வீடுகளில் வளர்க்கும் கால்நடைகளுக்கு ஆண்டுக்கு 10 ரூபாய் செலுத்தி மாநகராட்சியில் உரிமம் பெற வேண்டும் எனவும், அவை பராமரிப்பின்றி சாலைகளில் விடப்பட்டால் உரிமையாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும், அதற்கு தினசரி பராமரிப்பு கட்டணமாக 200 ரூபாயும் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.