வருகிற 13-ந் தேதி தொடங்கும் நடப்பாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரை அடுத்த மாதம் 21-ந் தேதி வரை நடத்த சபாநாயகர் தலைமையிலான அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் பட்ஜெட்டிற்கு பிறகு, துறை ரீதியான மானியக் கோரிக்கைகளை எந்தெந்த தேதியில் தாக்கல் செய்வது குறித்தும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, செப்டம்பர் 18, 20 ஆகிய தேதிகளில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைகளுக்கான மானிய கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்கிறார்.