தமிழகத்தில் வரி வருவாய் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளதாக கூறியுள்ள நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வரியே வசூலிக்காமல் எப்படி ஆட்சி நடத்த முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜீரோ வரி பட்ஜெட்டால் ஏழைகள் பயனடைய முடியாது, மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் லாபமடைகின்றன என்றும் அவர் கூறியுள்ளார். மின்வாரியத்திற்கும், குடிநீர் வடிகால் வாரியத்திற்கும் மின்சாரம் மற்றும் குடிநீருக்கான கட்டணங்களை உள்ளாட்சி அமைப்புகள் செலுத்துவதில்லை என கூறிய அவர், அந்த வகையில் உள்ளாட்சி அமைப்புகள் வைத்துள்ள கடன் ரூ.1,743.30 கோடி என தெரிவித்தார்.
தமிழ்நாடு மதிப்புமிக்க நில உடைமைகள் முதல், பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள பொது நிறுவனங்களில் குறிப்பிடத்தக்க பங்குகள் வரை மிகப்பெரிய வளங்களை கொண்ட பணக்கார மாநிலம் என அவர் தெரிவித்துள்ளார். எனவே வளர்வதற்கு திட்டமிடும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் என நிதியமைச்சர் கூறியுள்ளார்.